TNSCPS Recruitment 2020 for Public Relation Worker & Social Worker | தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு 2020
தமிழ்நாடு அரசு சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் மாவட்டஆட்சித்தலைவரை தலைவராக கொண்டு இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சமூகப்பணியாளர் பணியிடம் மற்றும் புறத்தொடர்பு பணியாளர் பணியிடம் என மொத்தம் இரண்டுபணியிடங்கள் காலியாக உள்ளது.
இந்த வேலைக்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் & பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் – ஆனால் இந்த வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்ட மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருந்தால் இந்த வேலை கிடைக்க முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்த வேலைக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்:
1. சமூகப்பணியாளர்
2. புறத்தொடர்பு பணியாளர்
மாதம் சம்பளம்:
1. சமூகப்பணியாளர் – Rs.14,000/-
2. புறத்தொடர்பு பணியாளர் – Rs. 8,000/-
வயது வரம்பு:
18 to 40
Last Date: 17-10
கல்வி தகுதி மற்றும் இதற தகுதிகள்:
1. சமூகப்பணியாளர் – 1 பணியிடம் – கல்வி தகுதி: பட்டதாரி / முதுகலை பட்டதாரிகள் / (10+2+3 – Pattern) மேலும் உளவியல் / சமூகப்பணி / சமூகவியல் /வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் வயது வரம்பு: 40 வயது 01-06-2020 மிகாமல் இருத்தல் வேண்டும். முன் அனுபவம்: குழந்தைகள் சார்ந்த பணியில் 2 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
2. புறத்தொடர்பு பணியாளர் – 1 பணியிடம் கல்வி தகுதி: 10ம் வகுப்பு அல்லது
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் குழந்தைகள் சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 40 வயது (01.06.2020) மிகாமல் இருத்தல் வேண்டும். முன் அனுபவம்: குழந்தைகள் சார்ந்த பணியில் 1 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்ட மாவட்டம்:
தமிழ்நாடு அரசு சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் மாவட்டஆட்சித்தலைவரை தலைவராக கொண்டு இயங்கி வரும் அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சமூகப்பணியாளர் பணியிடம் மற்றும் புறத்தொடர்பு பணியாளர் பணியிடம் என மொத்தம் இரண்டு பணியிடங்கள் காலியாக உள்ளது.
மேலும் அரியலூர் மாவட்டத்தை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை
அளிக்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்தினை
17.10.2020 அன்று மாலை 05.00 மணிக்குள் அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் இரண்டாவது தளம் அரசு பல்துறை வளாகம் ஜெயங்கொண்டம் சாலை அரியலூர் -621704 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.த.ரத்னா இஆப. அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
OFFICIAL NOTIFICATION LINK: CLICK LINK
APPLICATION FORM LINK: CLICK HERE
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட BDO ஆபிசிலும் வேலைவாய்ப்பு 2020: Click Link