தமிழ்நாடு (TNEGA) இ-சேவை-ஆளுமை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு TNEGA (Tamil Nadu e-Governance Agency) – இ-சேவை-ஆளுமை நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 20 பதவிகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
கீழே உள்ள இருபது பதவிகளும் இரண்டு வருடகாலம் ஒப்பந்தம் காண்ட்றாக்ட் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருபது பதவிகளின் பெயர்கள்:
- மூத்த திட்ட மேலாளர் ஆட்சேர்ப்பு
- மென்பொருள் பொறியியல் மேலாளர் ஆட்சேர்ப்பு
- வணிக ஆய்வாளர் ஆட்சேர்ப்பு
- தர உத்தரவாத ஆட்சேர்ப்பு
- யுஎக்ஸ் டிசைன் லீட் ஆட்சேர்ப்பு
- முன்னணி தொழில்நுட்ப எழுத்தாளர் ஆட்சேர்ப்பு
- டெக் லீட்-ஐடி உள்கட்டமைப்பு ஆட்சேர்ப்பு
- மூத்த தீர்வு கட்டிடக் கலைஞர் – நிறுவன மென்பொருள் ஆட்சேர்ப்பு
- தீர்வு கட்டிடக் கலைஞர் – பிஐ / அனலிட்டிக்ஸ் ஆட்சேர்ப்பு
- தொழில்நுட்ப முன்னணி – தரவுத்தள ஆட்சேர்ப்பு
- டெக் லீட் – போர்ட்டல் – ஃப்ரண்ட் எண்ட் டெவலப்மென்ட் ஆட்சேர்ப்பு
- டெக் லீட் – போர்ட்டல் – ஜிஐஎஸ் ஆய்வாளர் ஆட்சேர்ப்பு
- தொழில்நுட்ப முன்னணி – போர்டல் – வலை அபிவிருத்தி ஆட்சேர்ப்பு
- தொழில்நுட்ப முன்னணி – சேவை ஒருங்கிணைப்பு-ஏபிஐ மேம்பாட்டு ஆட்சேர்ப்பு
- தொழில்நுட்ப முன்னணி – சேவை ஒருங்கிணைப்பு-ப.ப.வ. ஆட்சேர்ப்பு
- தொழில்நுட்ப முன்னணி – தரவு ஒருங்கிணைப்பு – AI / ML ஆட்சேர்ப்பு
- டெக் லீட் – பிளாக்செயின் ஆட்சேர்ப்பு
- தீர்வு கட்டிடக் கலைஞர் -டேட்டா கட்டிடக்கலை ஆட்சேர்ப்பு
- கிளவுட் சொல்யூஷன்ஸ் ஆர்கிடெக்ட் ஆட்சேர்ப்பு
- தீர்வு கட்டிடக் கலைஞர் – இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் ஆட்சேர்ப்பு
இந்த இருபது பதவிகளையும் விண்ணப்பிப்பதற்க்கு வயது வரம்பு, கம்யூனிட்டி பிரிவுலாம் கிடையாது – எனவே எந்த வயதை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எந்த கம்யூனிட்டி பிரிவை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி ஆண்கள் / பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
இந்த பதவிகளை விண்ணப்பிப்பது எப்படி
தமிழ்நாடு இ-சேவை-ஆளுமை நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணைய தள https://tnega.tn.gov.in/careers வெப்சைட்டில் இந்த இருபது பதவிகளையும் அவர்களுக்கு தகுதியான பதவிகளை தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கலாம்.
இந்த பதவிகளை விண்ணப்பிப்பதற்க்கான தகுதிகள் முன் அனுபவம் ஜாப் டிஷ்கிரப்சன் போன்ற முழு விபரங்களும் அந்த அந்த பதவிகளின் பெயரின் கீழ் முழுவிபரங்களும் குடுக்கப்பட்டுள்ளது
அந்த அந்த பதவிகளின் லிங்க் கீழயே அப்லே ஆன்லைன் என்ற பட்டனும் குடுக்கப்பட்டுள்ளது, மேலும் அந்த பதவியின் முழு விபரங்களும் அந்த லிங்க் கீழயே விரிவாகவும் விபரமாகவும் குடுக்கப்பட்டுள்ளது அதை நீங்கள் முழுமையாக படித்து உங்களுக்கு அது எழுஜிபுல் இருந்தால் மட்டும் தான் விண்ணப்பிக்க வேண்டும்.
இதில் ஒவ்வொரு பதவிகளுக்கும் கீழ் Qualification / Responsibilities / Technical Skills இவை மூன்றும் தெளிவாகவும் விவரமாகவும் குடுக்கப்பட்டிருக்கும் அதை நீங்கள் கவனமாக படித்தப்பின்பு உங்களுக்கு விண்ணபிக்க தகுதி இருக்கிறதா என்று உறுதி செய்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்
இதில் உள்ள பதவிகளுக்கு உங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி இருந்தால் அந்த பதவியின் கீழ் அப்லே ஆண்லைன் என்ற பட்டனை அழுத்த வேண்டும் அதை அழித்திய பிறகு TNEGA என்கிற கெரியர் அப்லே பண்ற வெப்சைட் ஓப்பன் ஆகும் இந்த விண்ணப்பிக்கும் வெப்சைட்டில் முதலில் உங்கள் பேசிக் டீடியலான தகவல்களை நிரப்ப வேண்டும் (Basic Information – என்று குடுத்திருப்பார்கள்) இதில் முதலில் உங்கள் பெயர், டேட் ஆப் பர்த், முபைல்நம்பர், இமெயில் ஐடி,பாலினம்,முகவரி, போன்றவற்றை நிரப்ப வேண்டும்,
பிறகு உங்கள் ஐடி புரூப் ஆவணங்கள் உங்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு ஐடி கார்ட் நம்பர் நிரப்ப வேண்டும். அடுத்து அந்த ஐடி கார்டை 1MB க்குள் pdf,jpg,jpeg.png இதில் எதாவது ஒரு பார்மெட்டில் ஸ்கேன் செய்து வலைதளத்தில் அட்டாச் செய்ய வேண்டும்
அடுத்து Educational Qualification (Educational Qualification – என்று ஒரு லைன் குடுத்திருப்பார்கள்) இதில் உங்களுடைய கல்விதகுதி விவரங்களை நிரப்பவேண்டும் இதில் Highest Degree / Specialization / Institute / University Year Of Passing போன்ற வரிகள் இடம்பெற்றிருப்பதை நிரப்ப வேண்டும்
அடுத்து ( Employment Details(Current/Position Last Held என்று ஒரு லைன் குடுத்திருப்பார்கள்) இதில் தற்போது வேலை செய்கிற விவரங்கள் அல்லது கடைசியாக வெலை செய்த உங்களுடைய முன் அனுபவங்கள் விவரங்கள் குடுக்க வேண்டும் இதில் Organization / Designation / No. Of Years In This Position / Total Years Of Experience போன்ற வரிகள் இடம்பெற்றிருப்பதை நிரப்ப வேண்டும்
அடுத்து ( Skill Set என்று ஒரு லைன் குடுத்திருப்பார்கள்) இதில் Primary Skills / Skill Set என்ற இரண்டு பகுதியைய்யும் நிரப்ப வேண்டும்
அடுத்து (Resume என்று ஒரு லைன் குடுத்திருப்பார்கள் – இதில் உங்களுடைய புரபைல் சுய விவரங்களுடன் கூடிய கடிதம் உங்களுடைய ரெசிமை pdf,jpg,jpeg.png,doc,docx இதில் எதாவது ஒரு பார்மெட்டில் ஸ்கேன் செய்து அட்டாச் செய்ய வேண்டும் – தற்பொழுது விண்ணப்பிக்கும் இறுதிகட்டத்தில் வந்துவிட்டோம் அதில் நான் ரோபோட் இல்லை என்ற கேப்சாவை டிக் செய்ய வேண்டும். இதன் பிறகு கீழே சப்மிட் என்ற ஆப்சன் வரும் அதை கிளிக் செய்யும் முன் மேலே நீங்க குடுக்கப்பட்ட விவரங்கள் சரியானதாக இருக்கிறதா என்பதை செக் செய்யவும், எல்லாம் சரியானதாக இருந்தால் சப்மிட் பட்டனை அழுத்தவும், இதன் பிறகு உங்கள் விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்படும்.
இந்த பதவிகளை விண்ணப்பித்து முடித்தவுடன் தமிழ்நாடு இ-சேவை-ஆளுமை நிறுவனத்தில் இருந்து அவர்களே உங்களை தொடர்பு கொள்வார்கள் – Last Date Apply – இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 05th Aug 2020
இவை தொடர்பான மேலும் விவரங்களுக்கு வீடியோவாக பார்க்க யூடியூப் லிங்கை கிளிக்செய்து பார்வையிடவும்
TNEGA job vacancy Video Tutorials
மேலும் இந்த பதவிகளின் தொடர்பான அதிகப்படியான கூடுதல் விவரங்கள் அறிவதற்க்கும் மற்றும் உங்களுடைய சந்தேகங்களை அறிவதற்க்கு கமாண்ட் பன்னுங்க.
மேலும் எங்களை தொடர்பு கொள்ள Contact Us பக்கத்தில் உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.