குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சமூகப்பணியாளர் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. Requirement for Social Worker Jobs 2022
பத்திரிகை செய்தி
தருமபுரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும்
தற்காலிகமாக கீழ்க்கண்ட பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – தருமபுரி
மாவட்டத்தை சார்ந்த தகுதியான நபர்கள் உடன் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட
ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
தருமபுரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு கீழ்கண்ட காலிப்பணியிடம் 1
வருட ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளார். இதில் தேர்வு செய்யப்படும் பணியாளர்
கிழ்கண்ட பதவிக்கேற்ப அரசு அறிவித்துள்ள தொகுப்பூதியம் வழங்கப்படும்.
நிரப்பப்படவுள்ள காலிப்பணியிடம் மற்றும் தொகுப்பூதியம்
1 பதவி தொகுப்பூதியம் ரூ.18,536/- ஒரு மாதத்திற்கு
சமூகப்பணியாளர் Social Worker Post
வயது, கல்வித் மற்றும் அனுபவம்
* சமூகப்பணியாளர் Social Worker பட்டதாரி (10+2+3 மாதிரி) சமூகப்பணி /
சமூகவியல் / சமூக அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பணியில் பணிபுரிந்த
அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் மற்றும் கணிணியில்
பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். ( Graduate Preferably in B.A in social work / sociology /social sciences from experience candidate proficiency in computer)
* வயது-40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது
மேற்கண்ட பதவிக்கான தகுதியுள்ள விஎர்ணப்பங்கள் புகைப்படத்துடன் (Passport Size) கூடிய
விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து 21.11.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் கீழ்கண்ட
முகவரியில் வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
சமூகப்பாதுகாப்புத்துறை,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
தருமபுரி.
மாவட்ட ஆட்சித் தலைவர்,
தருமபுரி.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
தருமபுரி
OFFICIAL NOTIFICATION PDF:
OFFICIAL APPLICATION FORM PDF: