how to link bank account with ration card | how to add bank account in ration card | how to check ration card link with bank account | How To Link Bank Account With Ration Card | How to Link Ration Card Link With Bank Accounts
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.1,000 வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவும் நிலையில் தற்போது கூட்டுறவுத்துறை சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு கூட்டுறவுத்துறை வாயிலாக தான் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. பொங்கல் பண்டிகையொட்டி வழங்கப்படும் பரிசு தொகுப்பு பொருட்களும் கூட்டுறவுத்துறை மூலம் தான் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தான் கடந்த 19ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடந்தது. இந்த கூட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு உள்ளிட்ட விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் வழக்கமாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சேலைகளின் டிசைன், வண்ணம் மாற்றப்பட்டன.
இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்குவதற்கு பதில் வங்கி கணக்கில் ரூ.1000 பணம் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி இன்னும் அரசு தரப்பில் உறுதி செய்யப்படாத நிலையில் ரூ.1000-யை குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
வங்கி கணக்கு விபரம் இல்லை
இதற்கிடையே தான் ரேஷன் குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கு விபரங்களை சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்ற. அதாவது சமீபத்தில் கூட்டுறவு கூட்டுறவுத்துறை சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அதிகாரிகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். அப்போது ரேஷன் குடும்ப அட்டைதாரர்கள் வங்கி கணக்குகள் வைத்துள்ளனர். இருப்பினும் ஆதார் இணைக்கப்படாததால் வங்கி கணக்கு இல்லை என காட்டுகிறது. மொத்தம் 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களில் 14 லட்சத்து 86 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கு விவரங்கள் இல்லை என தரவுகள் கூறுகிறது.
வங்கி கணக்கு துவங்க..
இவர்களுக்கு உடனடியாக மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் வங்கி கணக்கு தொடங்க மண்டல இணை பதிவாளர்கள், பணியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. மேலும், வங்கி கணக்கு வைத்திருப்போர் பாஸ் புத்தகத்தின் நகலில், குடும்ப தலைவர் பெயர் மற்றும், குடும்ப அட்டை எண்ணை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் என கூட்டுறவுத்துறை என உத்தரவிட்டது. இதற்கான செயல்பாடுகள் தற்போது தமிழகத்தில் நடந்து வருகிறது.
புதிய அறிவிப்பு
இந்நிலையில் தான் தற்போது கூட்டுறவுத்துறை பதிவாளர் சார்பில் துறை அதிகாரிகளுக்கு இன்று அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ‛‛தமிழகத்தில் 14,84,582 குடும்ப அட்டைதாரர்களில் ஏற்கனவே வங்கி கணக்கு எண் வைத்திருப்பவர்களை சந்தித்து அவர்கள் வைத்துள்ள வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சொல்லி அறிவுரை வழங்கினால் மட்டுமே போதும். அவர்கள் குறித்து வேறு எந்த தகவல்களையும் பெற வேண்டியது இல்லை. வங்கி கணக்கு எண் இல்லாதவர்ளை பொறுத்தவரையில் நேற்று வெளியிடப்பட்ட நடைமுறையில் எந்தவித மாற்றமும் இல்லை” என கூறப்பட்டுள்ளது.
சேமிப்பு கணக்கு ஆனாலும் தற்போது ஆதார் எண் உள்ள குடும்ப அட்டைதாரர்களில் 14.60 லட்சம் பேருக்கு வங்கியில் சேமிப்பு கணக்குகள் இல்லை எனத் தெரியவந்துள்ளது. எனவே இவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டுமென்று மண்டல இணை பதிவாளர்களிடம் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அண்மையில் தெரிவித்தார்.
குளறுபடிகள் ஏற்பட்டது அதேபோல் கடந்த தைப்பொங்கலுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட 21 பொருள்கள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இதில் பல குளறுபடிகள் ஏற்பட்டது. எனவே இந்த குளறுபடிகளைத் தவிர்க்கத் தான் தமிழக அரசு வரும் தைப்பொங்களுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணமாக வழங்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
குறிப்பாக வங்கிக் கணகுக்குளில் வரவு வைக்கப்படுவதால் பயனாளிக்குச் சரியான முறையில் ரூ.1000 சென்றடைவது உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீரோ பேலன்ஸ் கணக்கு
மேலும் ஏற்கனவே வங்கி கணக்கு இருந்தால், அதன் விவரங்களைப் பெறுவதற்கும், இல்லாதவர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் கணக்கு (Zero Balance Account) துவங்குவதற்கும், அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
காரணம் என்ன?
அதாவது வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்காதவர்களிடம் குடும்ப தலைவர் பெயர், குடும்ப அட்டை எண் உள்ளிட்ட விபரங்களை பெற வேண்டும் என முதலில் கூறப்பட்டு இருந்தது. தற்போது அது வேண்டாம் என கூட்டுறவுத்துறை பதிவாளர் தனது அறிவிப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.