How to Apply EB Connection online Tamil Nadu
வீட்டுக்கு புதிய கரண்ட் கனைக்சன் மின் இணைப்பு வாங்க ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? How to Apply for New Eb Electricity Connection Online 2020 | ஆன்லைனில் எப்படி படி படியாக ஸ்டெப் பை ஸ்டெப்பாக அப்லே பன்னுவது என்று முழு கட்டுறையாக படங்களுடன் விரிவாக குடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள நமது புதிய வீட்டுக்கு மின்சார கணைக்சன் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும், புதிய கரண்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய வெப்சைட் https://www.tangedco.gov.in/ இந்த லிங்கை கிளிக் செய்தால் Tangedco என்ற TNEB-ன் அதிகார பூர்வ இணையதளம் ஓப்பன் ஆகும், அந்த வெப்சைட்டில் Billing Service என்ற ஒரு பட்டன் இருக்கும், அதில் முதலாவதாக Online Application – LT New Service Connection என்ற ஒரு ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.
இதை கிளிக் செய்ததும் அடுத்த அப்லே பண்ற பேஜ் ஓப்பன் ஆகும், அதில் Tamil Nadu Generation and Distribution corporation Limited என்ற கெட் லைன் இடம் பெற்றிருக்கும்
இதில் ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது என்ற டெர்ம்ஸ் அன்ட் கண்டிசன் போன்ற தகவல்கள் ஆங்கிலத்தில் விரிவாக இருக்கும் அதை முழுமையாக பட்டித்துக் கொள்ளவும்,பிறகு அந்த பேஜ் கீழ் கடைசியில் For filing online Clickhere இந்த லிங்க் பட்டனை கிளிக் செய்ய வேண்டும், அதை கிளிக் செய்தவுடன் நியூ சர்விஸ் கனைக்சன் (New Service Connection Application) என்ற பெயரில் அப்ளிகேண்ட் கேட்டகிரி (Applicant Category) என்ற ஆப்சன் காட்டும்
இதில் நான்கு ஆப்சன் இருக்கும், 1.புது கனைக்சன் வாங்குவது,
2.பவர் லோடு அதிகரிப்பது, 3.பவர் லோடு குறைப்பது,
4.டெம்ப்ரவரியான கனைக்சன் வாங்குவது போன்ற நான்கு கேட்டகிரி இருக்கும் இதில் நாம் 1. புது கனைக்சன் வாங்குவது (New Service Connection) என்ற ஆப்சைனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அடுத்து உங்க மாவட்டம், உங்க ஊர் சர்க்கில், உங்க ஊர் செக்சன், சர்விஸ் கேட்டகிரி, இடத்தோட மொதலாழி முகவரி போன்ற தகவல்களை மிகவும் கவனமாகவும் சரியாகவும் நிரப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பத்தை நிரப்பும் முறை:
அப்ளிகேசன் கேட்டகிரி என்ற ஆப்சனில் நியூ சர்விஸ் கனைக்சன் என்று குடுக்க வேண்டும், டிஸ்டிக் என்ற ஆப்சனில் உங்கள் மாவட்டத்தை குடுக்க வேண்டும், செலக்ட் யுவர் சர்கில் என்ற ஆப்சனில் உங்க ஈபி ஆபிஸ் மாவட்ட சர்கிளை குடுக்க வேண்டும், செலக்ட் யுவர் செக்சன் என்ற ஆப்சனில் உங்க ஊர் ஈபி ஆபிஸ் இருக்கும் ஊரின் பெயரை குடுக்க வேண்டும்,அடுத்து சர்விஸ் கேட்டகிரி என்ர ஆப்சனில் அதர்ஸ்( others) , சென்றல் கெவர்மெண்ட், லோக்கல் பாடி கார்ப்பரேசன், ஸ்டேட் கெவர்மெண்ட்,பப்ப்ளிக் செக்டார் கெவர்மெண்ட் அன்டர் டேக்கிங், பாரின் டிப்லொமேட்ஸ், போன்று மொத்தம் ஆறு விதமான ஆப்சன் இருக்கும் இதில் நாம் அதர்ஸ் (OTHERS) என்று முதலாவதாகவே ஆப்சனில் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும் – குறிப்பு இதில் அதர்ஸ் (OTHERS) தவிற வேறு ஆப்சன் குடுத்து விண்ணப்பித்தால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனவே மிகவும் கவனமாகவும் சரியாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.அடுத்த ஆப்சன் நீங்கள் இருக்கும் முகவரியும் கரண்ட் கனைக்சன் எடுக்கும் முகவரியும் சேம் ஒரே முகவரியா அல்லது தனி தனி முகவரியா என்று கேக்கும் அதில் ஒரே முகவரியாக இருந்தால் எஸ் (YES) என்று குடுக்க வேண்டும் இல்லை என்றால் நோ ( NO) என்று குடுக்க வேண்டும்.இது எல்லாம் நிரப்பிய பிறகு புரசீட் என்ற பட்டனை அழுத்த வேண்டும், பிறகு அடுத்த அப்லே போர்டல் ஓப்பன் ஆகும், – அதில் உங்களுடைய முக போட்டாவை அட்டாச் செய்ய வேண்டும்.
இதில் முதலில் உங்கள் போட்டாவை 300kb கேபிக்குள் jpg/jpeg ஏதாவது ஒரு பார்மெட்டில் அப்லோடு செய்ய வேண்டும்.அடுத்த ஆப்சனில் அப்ளிகேண்ட் பெயர் குடுக்க வேண்டும், அடுத்து நேம் ஆப் the அப்பா பெயர் அல்லது அம்மா பெயர் அல்லது கணவர் பெயர் இதில் ஏதாவது ஒன்று குடுக்க வேண்டும்.
Description of the Premises: ( என்ற ஆப்சன் இருக்கும் )
டிஸ்கிரப்சன் ஆப் பர்மிஸ் இந்த காலத்தில் நீங்க கரண்ட் கனைக்சன் எடுக்கும் வீட்டின் அட்ரஸ் முகவரி குடுக்க வேண்டும், இதில் டோர் நம்பர் வீட்டு வரி ரசீதில் உள்ள நம்பரைக்குடுத்து விண்ணப்பிக்க வேண்டும்,இதில் உங்கள் முபைல் நம்பர், இமெயில் ஐடி அடுத்த காலத்தில் குடுத்து நிரப்ப வேண்டும்,அடுத்து ஜீஎஸ்டி இருந்தால் எஸ் என்று குடுக்ங்க இல்லாட்டி நோ என்று குட்ங்க, எஸ் குடுத்தால் ஜீஎஸ்டி நமபர் குடுக்க வேண்டும், நோ என்றால் அது தேவையில்லை இந்த அப்சன் கம்பள்சரியும் கிடையாது,அடுத்து பேஸ் குடுக்க வேண்டும் உங்களுக்கு சிங்கிள் பேஸ் தேவையன்றால் அதை குட்ங்க அல்லது மூன்று பேஸ் வேண்டுமென்றால் அதை குடுங்க, – சிங்கிள் பேஸ் பேமண்ட் கம்மியாக வரும், மூன்று பேஸ்க்கும் பேமண்ட் அதிகமாக வரும்,பெரும்பாலும் எல்லாருமே இதில் சிங்கிள் பேஸ் தான் எடுப்பார்கள், அதன் பிறகு தாரிப் ( Domestic Residential-1A ) என்பதை தேர்ந்தெடுக்கவும், அதன் பிறகு சப் கேட்டகரி இருக்கும் அது கம்பல் சரி கிடையாது பில் பன்ன வேண்டியதில்லை, அடுத்து வயரிங் கம்ளீட் ஆயிருச்சானு ஒரு ஆப்சன் வரும் அதில் ஆயிருச்சு என்று எதாவது ஒரு தேதி குடுங்க,
அடுத்து ஆவணங்கள் அப்லோடு செய்ய வேண்டும் டெஸ்ட் ரிப்போர்ட், வீட்டுவரி ரசீது, ஆதார் ஜெராக்ஸ், சிட்டா காப்பி, வீஏஓ சான்று, அப்ளிகேசன் பாரம் இவையணைத்தும் அப்லோடு செய்ய வேண்டும்.
அடுத்து உங்களுக்கு எவ்வளவு லோடு வேண்டும் என்று குடுக்க வேண்டும் – உதாரணத்திற்க்கு உங்க வீட்டில் எத்தனை பேன், பிரிட்ஜ், லைட், இதுமாதிரியான மின் சாதனபொருட்கள் எவ்வளவு வாட்ஸ்ல வேனுமோ அதை குடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.
இது எல்லாம் நிரப்பிய பிறகு சப்மிட் அப்ளிகேசன் என்று குடுக்க வேண்டும் – அதன் பிறகு பணம் கட்டவேண்டிய ரசீது ஜெண்ரேட் ஆகும்,
அந்த பேமண்ட் ரசீதில் அப்ளிகேசன் நம்பர் வந்திருக்கும் அதில் மொத்தம் எவ்வளவு பணம் கட்ட வேண்டிய தகவல் இருக்கும், 2818 ரூபாய் பணம் கட்ட வேண்டும், அதை எப்படி கட்ட வேண்டும் என்றால் TNEB https://www.tnebnet.org/awp/login இந்த வெப்சைட்டில் கட்ட வேண்டும், அதில் யூசர் ஐடி உங்க அப்ளிகேசன் நம்பர் குடுக்க வேண்டும், பாஸ்வோர்டு நீங்கள் விண்ணப்பிக்கும் போது குடுத்த முபைல் நம்பர்தான் பாஸ்வோர்ட், உங்க அப்ளிகேசன் நம்பர் பிளஸ் உங்க முபைல்நம்பர் குடுத்து லாக்கிங் செய்ய வேண்டும்.
லாக்கிங் செய்த பிறகு பணம் கட்டவேண்டிய ஆப்சன் வரும் அந்த லிங்கை கிளிக் செய்து உங்க பேங்க் அக்கவ்ண்ட் மூலமாக பணத்தை கட்ட வேண்டும் – பிறகு பிரிண்ட் அப்ளிகேசன் ஆப்சனில் உங்க அப்ளிகேசன் நம்பரை போட்டு அப்ளிகேசனை டவுண்லோடு செய்து அனைத்தையும் பிரிண்ட் காப்பி எடுத்து அனைத்து நகல்களையும் உங்க EB ஆபிசில் நேரடியாக சென்று குடுக்க வேண்டும்.
இது வீட்டு சர்விசுக்கான விண்ணப்ப வழிம்றைகள் மட்டும் தான்,
கடை சர்விஸ், விவசாய சர்விஸ், டெம்பரவரி சர்விஸ்,மற்ற அதர் சர்விசில் தாரிப்க்கள் மாறுபடும்,
மேலும் இந்த பதவிகளின் தொடர்பான அதிகப்படியான கூடுதல் விவரங்கள் அறிவதற்க்கும் மற்றும் உங்களுடைய சந்தேகங்களை அறிவதற்க்கு கமாண்ட் பன்னுங்க.
மேலும் எங்களை தொடர்பு கொள்ள Contact Us பக்கத்தில் உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.